9 ஏப்., 2014

இது இந்தியா ஒற்றுமை கூடு...!



இது இந்தியா
ஒற்றுமை கூடு...!
அனைத்து மதமும்
அமர்ந்து,அவர்யவர்
மொழியில் பேசி 
வாழும் கூடு...!
எனது தேசம் என்ற இடத்தில்
மதம் எதுவாக இருந்தாலும்
போடுவது இந்தியன் என்று
அதை வெட்டி கூறு போடவேண்டாம்...!
நாளைய இந்தியா
இணைந்தே இருக்கட்டும்
இன்று உனக்கு
நாளை உன் எதிரிக்கு
இடமாறும் வன்முறை
இது தான் அதன்
வரைமுறை
வேண்டாம் ...
உன் திட்டம் நூற்றண்டு
இருக்கலாம்
ஒரு காலத்தில்
வன்முறையாளர்களே
நீங்களே இடிந்து போகலாம்..!
வேண்டாம் !
இந்தியா
என்ற தேன் கூட்டை
கல்லை எறிந்து
கலைக்காதே
தேனீக்கள் ஒன்றாய் சேர்ந்தால்
உன் கதி என்னாகும் யேசித்து பார்
உன்னால்
இருக்கவே முடியாது...!
வன்முறை எனபது
இருமுனை கத்தி
எடுத்தவையும் அது
பழிவாங்கும்...

3 ஏப்., 2014

தீயாய் போவதை

சொந்த விருப்பு
வெறுப்புகளை
தன் மீது இருக்கும்
அன்பால் அதை...
தீயாய் ஏறிய விட்டு
குளிர் காய்கிறார்கள்
இன்றைய தலைவர்கள்...!
பாவம் அவன்
அதில் அவனே
தீயாய் போவதை அறியாமலே
ரோசத்தோடு
கோஷமிட்டப்படி...!

14 மார்., 2014

பொம்மையாய் மனம்...!

கணினியோடு ஒப்பந்தம் 
மனைவி கூட குடித்தனம்
பிள்ளைகளுடன் அரட்டை
எல்லாமே இன்று 
பேஸ் புக்கில் இருக்க ...
பொம்மையாய்
மனம்...!

அப்பாவி தான் என்று...!

அவர்கள் வாக்கு நம்பி 
எனது வாக்கை
அந்த  கூட்டணிக்கே 
வாக்களித்தேன்....
எனது விரல் மை 
அழியும் முன்னே
கூட்டணி மாறிவிட்டனர்...!

என்னை பார்த்து 
எனது வாக்கு சீட்டு 
சிரித்தது...
என்றுமே நீ
அப்பாவி தான் என்று...!
===========================
கரை சேர்ப்பார்கள் என்று 
எண்ணிய படி
காத்திருக்கும் விரல்கள் 
கறை பட...!