9 ஏப்., 2014

இது இந்தியா ஒற்றுமை கூடு...!இது இந்தியா
ஒற்றுமை கூடு...!
அனைத்து மதமும்
அமர்ந்து,அவர்யவர்
மொழியில் பேசி 
வாழும் கூடு...!
எனது தேசம் என்ற இடத்தில்
மதம் எதுவாக இருந்தாலும்
போடுவது இந்தியன் என்று
அதை வெட்டி கூறு போடவேண்டாம்...!
நாளைய இந்தியா
இணைந்தே இருக்கட்டும்
இன்று உனக்கு
நாளை உன் எதிரிக்கு
இடமாறும் வன்முறை
இது தான் அதன்
வரைமுறை
வேண்டாம் ...
உன் திட்டம் நூற்றண்டு
இருக்கலாம்
ஒரு காலத்தில்
வன்முறையாளர்களே
நீங்களே இடிந்து போகலாம்..!
வேண்டாம் !
இந்தியா
என்ற தேன் கூட்டை
கல்லை எறிந்து
கலைக்காதே
தேனீக்கள் ஒன்றாய் சேர்ந்தால்
உன் கதி என்னாகும் யேசித்து பார்
உன்னால்
இருக்கவே முடியாது...!
வன்முறை எனபது
இருமுனை கத்தி
எடுத்தவையும் அது
பழிவாங்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக