ஆணைக்கட்டியில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ( படங்கள் )
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் திரண்டு கேரள மாநிலத்தில் உள்ள அகழியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து அதன்படி கோவையில் இருந்து இன்று (09.09.2012) காலை கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
தமிழக கேரள எல்லைப் பகுதியில ஆணைக்கட்டியில் போலீசாரால் தடுக்கப்பட்ட அவர்கள் கேரள அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தினரை சமாளிக்க முடியாததால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்
நன்றி நக்கீரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக