9 செப்., 2012

பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து முகமூடி போராட்டம் ( படங்கள் )



பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து முகமூடி போராட்டம் ( படங்கள் )

இந்தியாவை ஊழல் தேசமாக்கிவிட்டது காங்கிரசும்,பி.ஜே.பி யும் 'சிக்கலில் உள்ளது நம் தேசம் என்ன செய்வதாய் உத்தேசம்?' என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

சேலம் மாநகராட்சி பின்புறம் இருந்து ஊர்வலமாக துவங்கி நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் திரண்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர்.

'கல்வி,வேலைவாய்ப்பு,சுகாதாரம்,விவசாயம்,பொதுத்துறை,உணவு,கனிமவளங்கள் 'அனைத்தும் தனியார்மயமாகி செத்த பிணமாகிவிட்டது என்ற அடிப்படையில் அதை சவப்பெட்டி போல சுமந்து ஊர்வலமாக வந்தனர்.


1957 ல் முந்த்ரா ஊழல் ஒரு கோடியே 25 லட்சம், 1970 ல் நகர்வாலா ஊழல் 60 லட்சம், 1987 ல் போபர்ஸ் ஊழல் 64 கோடி, 1991 ல் 'ஜெயின் ஹவாலா 64 கோடி, 1996 ல் பீகார் மாட்டு தீவன 900 கோடி ஊழல், 2008 ல் சத்யம் ஊழல் 14 ,000 கோடி,2010 ல் காமன்வெல்த் 70,000 கோடி ஊழல், 2011 ல் 2G 1 லட்சத்தி 76,000 கோடி ஊழல், அதே ஆண்டில் ஆந்திர சுரங்க 16,000 கோடி ஊழல், அதே 2011 ல் s பேன்ட் அலைகற்றை இரண்டு கோடி ஊழல், 2012 ல் தமிழகத்தில் கிரானைட் ஊழல் 80 ,000 கோடி ஊழல், 2012 ல் நிலக்கரி சுரங்க ஊழல் 1 லட்சத்து 86,000 கோடி ஊழல் என இந்தியா இத்தனை ஆண்டு கால காங்கிரஸ்,பா.ஜ.க ஆட்சியால் ஊழல் தேசமாய் தான் காட்சி தருகிறது.

1948 முதல் 2012 வரை 916 லட்சத்து 60 ஆயிரத்து 323 கோடிகள் ஊழல் நடந்துள்ளது.இது அத்தனையும் மக்களுக்காக செலவழித்து இருந்தால் மக்கள் எப்பொழுதோ முன்னேறி இருப்பர்.. இலவச கல்வி,சுகாதாரம்,குடிநீர் பிரச்சனை இன்மை என மக்கள் அன்றாட பிரச்சனைகள் இல்லாமல் இருந்துருக்கலாம்...

இந்த அரசுகள் அதை செய்ய தவறி இந்தியாவை முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டனர் ஓட்டு போடுவது நாம் உரிமை கொண்டாடுவது முதலாளிகளா? தமிழக கிரானைட் மோசடியாகட்டும் அல்லது நிலகரி ஊழலாகட்டும் இயற்க்கை வளங்களை தனியாருக்கு கொடுப்பதால் தான் இத்தனை பிரச்சனைகளும் இயற்க்கை வளங்களை அரசே ஏற்று நடத்தினால் என்ன தவறு?இந்த அரசு தனியார்மய அரசு. பிரதமர் உட்பட இந்த அரசு அங்கத்தினர்கள் முகமூடி திருடர்கள்.



எனவே இந்தியாவை பெரு முதலாளிகளுக்கு விற்ற காங்கிரஸ் பா.ஜ.க வை புறக்கணிப்போம் ஊழலை ஒழிக்க அனைத்தையும் பொதுவுடமையாக்குவோம்.அதற்கே இந்த போராட்டம்' என்றார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாநகர செயலாளர் பிரவீன்.


ஆர்பாட்டத்திற்கு பெண்களும் சிறுவர் சிறுமிகளும் பெருமளவு திரண்டு குருடாக்கி போன அரசு என்பதை சுட்டிக்காட்ட கண்கள் ஓட்டையான முக மூடிகளை போட்டு போராடியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.


படங்கள் : இளங்கோவன்

நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக