5 ஆக., 2012

ஓட்டல், டீக்கடைகளில் அதிகாரிகள் சோதனை

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் ஓட்டல், டீக்கடைகளில் அதிகாரிகள் சோதனை: கியாஸ் சிலிண்டர், ரேஷன் மண்எண்ணை பறிமுதல்

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் ரேஷன் பொருட்கள் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அதிகாரி தங்கராஜ் தலைமையில் பூந்தமல்லி வட்ட வழங்கல் அதிகாரி ராஜ்குமார், பறக்கும்படை துணை தாசில்தார் வனமாலிதாஸ் ஆகியோர் பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் ரேஷன் மண்எண்ணை, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் ஆகியவை பதுக்கி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 19 சிலிண்டர்கள், 100 லிட்டர் மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை பதுக்கிய வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் ரேஷன் பொருட்களை பயன்படுத்தினால் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக