வழியில் கீழ்ப்பாக்கம் என்.எல்.சி. அலுவலகம் எதிரில் மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் சாலை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் வேகமாக வந்த ஸ்ரீரஞ்சனின் கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும், 2 ஆட்டோக்கள் மீதும் மோதியது.
மோட்டார் சைக்கிளில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அவரது தம்பி மகன் கோவர்த்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் மோதியதில் இரு ஆட்டோக்களும் நசுங்கியது. அதை ஓட்டி வந்த டிரைவர்கள் பிரபுதாஸ், முனுவேல் காயம் அடைந்தனர். காரை ஓட்டிய நடிகர் ஸ்ரீரஞ்சனும் காயம் அடைந்தார்.
தகவல் கிடைத்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். காயம் அடைந்த 5 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஐகோர்ட்டில் நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கோவர்த்தன் கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் நடிகர் ஸ்ரீரஞ்சன் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
நடிகர் ஸ்ரீரஞ்சன் விபத்து பற்றி கூறும்போது, நான் விடிய விடிய படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் தூக்க கலக்கமாக இருந்தேன் என்றார்.
விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவரது தந்தை முத்துசாமி ஓடிவந்து மகனைப் பார்த்தார். போலீசார் ஸ்ரீரஞ்சனின் டிரைவிங் லைசென்சை கைப்பற்றி ஆய்வு செய்ததில் தந்தை பெயர் செல்வராணி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை ரோட்டில் வசித்து வருவதாக டிரைவிங் லைசென்சில் முகவரி கொடுத்துள்ளார். அவர் பெயரை மாற்றி கொடுத்தது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் லைசென்சு பெற்றது குறித்தும் விசாரணை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக