9 ஆக., 2012

அத்வானி பேச்சு அமைதிக்கு தடையை ஏற்படுத்தும்: அசாம் அமைச்சர் கண்டனம்

துப்ரி, ஆக. 9- அத்வானி பேச்சு அமைதிக்கு தடையை ஏற்படுத்தும்: அசாம் அமைச்சர் கண்டனம் 

அசாம் கலவரம் பற்றி பாராளுமன்றத்தில் அத்வானி பேசியிருப்பது, சமாதான வழியில் மேலும் தடைகளை உருவாக்கும் என்று அசாம் மாநில சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

பாராளுமன்றக் கூட்டத்தின் முதல்நாளான நேற்று அசாம் கலவரம் தொடர்பாக பேசிய அத்வானி, ‘இது சமூக மோதல் இல்லை. இந்து - முஸ்லிம் மோதலும் இல்லை. பழங்குடி- பழங்குடி அல்லாதவர்களின் மோதல் இல்லை. எல்லை வழியாக ஊடுருவியவர்களுக்கும், இந்தியர்களுக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினைதான் அடிப்படை காரணம்’ என்றார்.

அத்வானியின் இந்த பேச்சுக்கு அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘அசாமில் இரு சமூக மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க முயற்சி செய்து வரும் வேளையில், அத்வானி இவ்வாறு கூறியிருப்பது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும். அசாம் மோதல் மனிதர்களிடையே நடந்த மோதல். இதில் நாங்கள் அரசியலை புகுத்த மாட்டோம். ஆனால் அத்வானி தேர்தலில் ஓட்டுகள் வாங்குவதை மனதில் வைத்தே, ஒட்டுமொத்த பிரச்சினையையும் இவ்வாறு பேசியிருக்கிறார்.

எனவே மூத்த அரசியல் தலைவரான அத்வானி, அசாமில் போடோ சமூகத்தினருக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்குமிடையே அமைதி திரும்ப வேண்டுகோள் விடுப்பார் என எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக