9 ஆக., 2012

ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு


 
சென்னை: தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கடந்த 2ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் பேச்சு வெளியாகியிருந்தது. சென்னை நகர மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது (காலராவால்), ஒரு முதல்வர் எப்படி விடுமுறையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என ஸ்டாலின் பேசி யதாக, அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியானது.


இதையடுத்து, ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியீட்டாளர், ஆசிரியருக்கு எதிராக அவதூறு வழக்கை, தமிழக அரசு சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார்.


மனுவில் கூறியிருப்பதாவது:முதல்வர் விடுமுறையில் இருக்கிறார் என கூறியிருப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. இது அவதூறானது. முதல்வர் எங்கு தங்கியிருந்தாலும், அவரது அலுவலக மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான கடமைகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அடிப்படையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக