துடில்லி: கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவ், நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அறிக்கையில் தகவல்: இந்நிலையில், மத்திய கலால் வரித்துறை இயக்குனரகம், ராம்தேவ், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளதாக, தனியார் "டிவி' சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாபா ராம்தேவ், திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு, 2007லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், இதற்கான சேவை வரியான, நான்கு கோடி ரூபாயை, ராம்தேவ் செலுத்தவில்லை. இது தொடர்பாக, கான்பூரைச் சேர்ந்த கலால் வரித்துறை அதிகாரிகள், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, இந்த அமைப்புகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரானது: இதற்கிடையே, குஜராத்தின் கரம்சாந்த் என்ற இடத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், பாபா ராம்த÷வ் கூறுகையில், ""அரசியல் கட்சி துவங்கும் நோக்கத்துடன், நான் போராட்டம் நடத்தவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்துகிறேன். அரசியல் கட்சி துவங்கப் போவதாக, ஹசாரே குழு அறிவித்துள்ளது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை,'' என்றார்.
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக