2 ஆக., 2012

இந்திய கப்பற்படையின் தளபதி, உதவி தளபதியாக அண்ணன், தம்பி

புதுடெல்லி, ஆக. 2- இந்திய கப்பற்படையின் தளபதி, உதவி தளபதியாக அண்ணன், தம்பி 

இந்திய கப்பற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் நிர்மல் வர்மா இருந்து வருகிறார். அதே கப்பற்படையில் பணியாற்றி வரும் அவருடைய சகோதரரான ரியர் அட்மிரல் பிமல் குமார் வர்மா, இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் இவர்கள் இருவரும் பாராளுமன்ற சவுத் ப்ளாக் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணியாற்றுவார்கள். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒரே வளாகத்தில் ஒரே தளத்தில் இரண்டு சகோதரர்கள் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

ரியர் அட்மிரல் பிமல் குமார் வர்மா, இன்னும் சில வருடங்களில் கப்பற்படையின் உயரிய பதவியான தளபதி பதவியை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக