புதுடெல்லி, ஆக. 2-
வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறவேண்டும் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய போராட்டத்தின்போது, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட 22 சமூக ஆர்வலர்கள் சார்பில் ஹசாரேவிடம் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது.
அக்கடிதத்தில், ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, மாற்று அரசியலை உருவாக்குவது பற்றி அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை ஏற்ற ஹசாரே, தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை நாளை மாலை 5 மணியுடன் முடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக மாற்று அரசியலை உருவாக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று உண்ணாவிரத மேடையில் பேசுகையில், ‘மத்திய அரசு வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாது. எனவே மாற்று அரசியல் திட்டத்திற்காக நாடு முழுவதும் 2 ஆணடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு திரட்ட உள்ளேன். ஆனால் அரசியலில் நான் நேரடியாக பங்கேற்க மாட்டேன். நமது அரசியல் கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள் இருப்பார்கள்’ என்றார்.
ஹசாரேவின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஹசாரேவின் ஆசை இப்போது அம்பலமாகியிருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார். மேலும் அரசியலை மனதில் வைத்துதான் ஹசாரே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்ததையும் அம்பிகா சோனி சுட்டிக்காட்டினார்.
புதுடெல்லி, ஆக. 2-
வலுவான லோக்பால் மசோதா, ஊழல் மந்திரிகள் மீதான நடவடிக்கை, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டு, அவர் ஏற்கனவே கூறியபடி, அரசியல் பிரவேசம் குறித்து பரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வி.கே.சிங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ, முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர் உள்ளிட்ட 22 பேர் எழுதிய கடிதத்தை இன்று உண்ணாவிரத மேடையில் நடிகர் அனுபம் கெர் வாசித்தார். அந்த கடிதத்தில், ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இன்றுடன் முடித்துக்கொண்டு, எதிர்கால திட்டம் குறித்து அறிவிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இதனை ஹசாரே குழுவினர் மறுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக