4 ஜூலை, 2012

மு.க.ஸ்டாலின் கைது

மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கரண்ட் கட்!

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

அந்தப் பகுதியில் எப்போதும் மின்சாரம் தடை படாது. இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மதியம் 12 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி திமுகவினர் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். சுமார் 250 பேர் அந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரை ரிமாண்ட் செய்த போலீசார், அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் முன் முன்னாள் எம்எல்ஏ கோஷம்! திமுகவினர் வியப்பு!

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
திருமண மண்டபத்திற்கு வெளியே திமுக முன்னாள் எம்எல்ஏ பாபு, திடீரென்று சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின் தரப்பிடம் இருந்து சிறிது காலம் விலகி இருந்த வி.எஸ். பாபு, திடீரென்று தற்போது மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியது, அங்கிருந்த திமுகவினரை ஆச்சரியப்பட  வைத்தது.

மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கரண்ட் கட்!

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
அந்தப் பகுதியில் எப்போதும் மின்சாரம் தடை படாது. இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மதியம் 12 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி திமுகவினர் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறை நிரப்பும் போராட்டம்! கைதான திமுகவினர் ஒவ்வொருரையும் வீடியோ எடுத்த போலீசார்!

திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

அதன்படி திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 666 திமுகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திமுகவினரை வாசுகி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட திமுகவினரை ஒவ்வொருவரின் பெயர், முகவரி, அங்க அடையாளங்களை எழுத ஆரம்பித்தனர். அதன் பின்னர் வரிசையாக நிற்க வைத்து வீடியோவும் தனித் தனியாக எடுத்தனர். மேலும் ஒவ்வொருவரிடமும் என்ன வேலை செய்கிறீர்கள், குடும்ப வருமானம் எவ்வளவு என்றும் போலீசார் கேட்டு தகவலை பெற்றனர்.

நன்றி நக்கீரன் 
இந்த போராட்டம் திமுக தொண்டர்களுக்கு  கொஞ்சம் புது  உற்ச்சாகத்தை  தந்தது உண்மைதான்...வரும்  தேர்தல் வரைக்கும் இது போதும் தொண்டர்களுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக