4 ஜூலை, 2012

மு.க.ஸ்டாலின்,தயாநிதி மாறன், கனிமொழி,குஷ்பு விடுதலை

சென்னை,ஜூலை.4-
தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தி.மு.க.வினர் விடுதலை 
 
 
தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்படுவது, குண்டர் சட்டத்தில் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் இன்று காலை 9 மணி அளவில் போராட்டத்தை துவக்கினார்கள். சென்னையில் மட்டும் மொத்தம் 16 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

வடசென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி., முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும், சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நடிகை குஷ்பு உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, சேலம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் அணி அணியாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். முடிவில் அனைவரும் திருமண மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் பெயர், விபரம், முகவரி சேகரிக்கப்பட்டது. இன்று மாலை கைதான அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கைதான ஸ்டாலின், தயாநிதி மாறன், கனிமொழி, குஷ்பு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலேயே தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருமணம் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திமுகவினர் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.


சென்னையில் கைதாகி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவ ரையும் விடுதலை செய்தனர் போலீசார்.இதே போல் 
குஷ்பு விடுதலை


தி.மு.க.,வினர் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி., ‘’முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

தி.மு.க.,வினர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் விடுதலையாகி வருகின்றனர்’’ என கூறியுள்ளார்.
நன்றி நக்கீரன்...

இதை திமுக எதிர்பாராதது....


திருவண்ணாமலை: சிறை நிரப்பும் போராட்டத்தில் திமுகவினர் (படங்கள்)


நன்றி படங்கள் நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக