நண்பர்கள் முன்னிலையில் ஆசிரியைக்கு தாலி கட்டிய மாணவன்
குமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ரோஷன் ஸ்மித்(21). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு பிடெக் சேர்ந்தார். பாடம் கடினமாக இருப்பதாகவும் அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்றும் கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலியில் செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி பெற போவதாக கூறி கடந்த மாதம் 11ம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கருங்கல் காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரோஷன் ஸ்மித் 31 வயது பெண் ஒருவருடன் கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். ரோஷன் ஸ்மித், கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அப்போது தனக்கு பாடம் கற்றுத் தந்த ரோஸ் லில்லி (31) மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியையும் ரோஷனை காதலித்துள்ளார்.
இந்நிலையில் பிளஸ் 2 முடித்த பின் ரோஷன் நாகர்கோவில் திரும்பினார்.
இங்கு கல்லூரியில் சேர்ந்ததால் தனது காதல் ஆசிரியையை பார்க்காமல் அவரால் இருக்க முடிய வில்லை. இதனால் கல்லூரிக்கு கட் அடித்து விட்டு கும்பகோணம் சென்றுவந்தார். இதனால் பாடம் புரியாமல் தவித்த அவர் கல்லூரி படிப்புக் கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையே டீச்சரை பிரிந்து இருக்க முடியாது என்று எண்ணிய ரோஷன் ஸ்மித் கும்பகோணம் கிளம்பி சென்று ஆசிரியையை கையோடு அழைத்து வந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆலயத்தில் நண்பர்கள் உதவியோடு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
மாணவன் டீச்சர் காதல் கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்த கருங்கல் போலீசார் இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசார் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களிடம் விசாரணைக்கு தேவைப் படும்போது அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
சாமியாருடன் 14 வயது மகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு
ராயபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (39). ஆட்டோ டிரைவரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித் தார். இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் வெளியே வந்த அவர், ’’எனது மனைவி சரள்மேரி. எங்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 14 வயது ஆகிறது. 9ம் வகுப்பு படித்து வந்தாள்.
சில வருடங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்தபோது பக்கத்து வீட்டில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். கோயிலில் குறி சொல்லும் அவர், பேய்களையும் விரட்டுவார்.
இவருக்கும் எனது மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் எனது மனைவியை கண்டித்தேன். அவர் கேட்காததால் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடியேறினேன்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு நான் தூங்கும்போது எனது மனைவி 2 மகள்களை அழைத்துக் கொண்டு முத்தையாவுடன் சென்றுவிட்டார்.
தற்போது, முத்தையாவுக்கு எனது மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க மனைவி ஏற்பாடு செய்து வருகிறார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மகளை மீட்டுத் தர வேண்டும். கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வரும் சரள் மேரி மற்றும் முத்தையா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினார்.
பள்ளிப்பாடம் படிக்காமல் காதல் பாடத்தை படித்துவிட்டாரே..
ஒருபக்கம் வயது முதிர்ந்த காதல்..அடுத்து பால்ய திருமணம்
என்ன கொடுமை சார் இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக