என்னால் முன்பு போல சிஷ்யைகளை கட்டிப்பிடிக்க முடியவில்லை. இதை எனது சிஷ்யைகள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் சிலவற்றை நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்று பேசியுள்ளார் நித்தியானந்தா.
திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்துள்ள நித்தியானந்தா நேற்று அங்கு பேசினார். பின்னர் அவரது சீடர்களுக்கு ஆசிரமத்தின் முழு நேர ஊழியர் என்ற பொறுப்பை வழங்கும் தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதுபோன்ற நிகழ்ச்சியின்போது நித்தியானந்தாவை ஒவ்வொரு சீடரும், சிஷ்யையும் கட்டிப் பிடித்து தீட்சை பெறுவார்கள். இந்த கட்டிப்பிடி சற்று வித்தியாசமானதாக இருக்கும். கட்டி அணைத்தும், தலையில் கை வைத்தும் தீட்சை கொடுப்பது நித்தியானந்தாவின் ஸ்டைல்.
ஆனால் நேற்று நடந்த தீட்சையின்போது பெண் சிஷ்யர்களை அவர் கட்டிப்பிடிக்கவில்லை. மாறாக தலையில் மட்டும் தொட்டு தீட்சை கொடுத்தார். ஆண்களை மட்டுமே கட்டிப்பிடித்தார்.
ஏன் இந்த மாற்றம் என்பதற்கும் அவரே ஒரு விளக்கமும் அளித்தார். அதுகுறித்து அவர் பேசுகையில், என் சீடர்களுக்கு இது முக்கியமான தருணம். என் மீது சாய்ந்து தீட்சை பெற முடியவில்லையே என சிஷ்யைகள் வருந்த வேண்டாம். அப்படி செய்தால் படம் பிடித்து பத்திரிகைகளில் போட்டுவிடுகிறார்கள். அதனால் சிலவற்றை தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியின்போது நித்தியானந்தா தலை மீது அவரது ஆதரவாளர்கள் கூடை கூடையாக பூக்களைக் கொட்டி அபிஷேகமும் செய்தனர். பலர் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்தனர்.
கே.பாலச்சந்தரின் டிவி சீரியலான அண்ணி மூலம் தமிழுக்கு அறிமுகமானவரான கன்னட நடிகை மாளவிகா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
இன்னுமா நம்பிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக