முதல்வரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட ஹோட்டல் ஊழியர்!
கோவா முதல்வர் மனோகர் பாரிகர், முதல்வராகப் பதவியேற்ற பின் தனிப்பாதுகாப்பு அதிகாரியைத் தவிர காவலுக்கு பாதுகாப்புப் படை இல்லாமலே அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
. தேவையற்ற செலவினங்களைக் குறைத்து மாநிலத்தின் வருவாயை அதிகாரிக்க இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகள் கட்டாயம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர், பனாஜியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பநடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்குச் சென்றார். அப்போது ஓட்டல் ஊழியர் அவரை தடுத்து நிறுத்தி சோத னையிட்டார்.
இது குறித்து பாரிகர், ‘’ஹோட்டலுக்குச் செல்லும்போது காவலர் என்னை உள்ளே விடாமல் நிறுத் தினார். நான் முதலமைச்சரான பின் 5-வது முறை இதுபோன்று நடக்கிறது.
அந்த ஊழியரிடம் நான் கோவாவின் முதல்வர் என்று தெரிவிக்குமாறு மற்றொரு ஊழியரிடம் கூறினேன்.
நான் முதல்வர் என்று அவருக்குத் தெரியவில்லை. அதனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. இது ஒரு பெரிய பிரச்னை இல்லை’’ என்று தெரிவித்தார்.
முதலில் கொஞ்சம் வியப்பாய் தான் இருந்தது இது இந்தியாவில் தான் நடந்ததா என்று வார்டு ,வட்டம் மாவட்டம் என்று கொடி கட்டி பறக்கும்
அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி ஒரு முதல்வரா ?வாழ்க வளர்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக