2 ஜூலை, 2012

சூர்யா நடித்து வரும் மாற்றான்....ஒரு பார்வை...,

   


சூர்யா நடித்து வரும் மாற்றான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரீஸ் என ’அயன்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய அதே கூட்டணி, ’மாற்றான்’ படத்தில் மறுபடியும் கைகோர்த்திருக்கிறது.

சூர்ய நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படம் மாற்றான். இப் படத்தை அயன், கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி ஆனந்த் இயக்குகிறார். பெரிய பட்ஜெட் படம் என்பதால் இயக்குனர் இப் படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் இன் சிவாஜி திரைப்பட பாடலான ”பல்லேலக்கா” பாடல் பூனாவில் படமாக்கப்பட்ட அதே ஸ்தானத்தில் மாற்றான் பாடல் ஒன்றும் படமாக்கப்படுகிறதாம்.

ஹரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் மாற்றான் திரைப்பட பாடல்கள் ஜூன் இல் வெளியாக இருக்கும் நிலையில், இத் திரைப்படம் ஜூலை மாதமளவில் திரையிடப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.சூர்யா மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்து வரும் மாற்றான் படம், நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ‘மாற்றான்’ ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவின் புறநகர் ஸ்லம்களில் படம்பிடித்து திரும்பியிருக்கிறது ’மாற்றான்’ படக்குழு. சென்னை திரும்பிய கையோடு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமாக ஒன்றரைக் கோடி செலவில் போடப்பட்டிருந்த செட்டில் “திண்ணத் திண்ணத் தீர்ந்தாயா?” என்ற பாடலை படமாக்கியிருக்கிறார்கள். நடன இயக்குனர் பிருந்தாவின் கோரியோலிராபியில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடலை பத்து நாள் சூட் செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் எல்லை, ஹைதராபாத், ரஷ்யா, குரேஷியா, செர்பியா, அல்பேனியா, மசிடோனியா ஆகியவற்றின் மிக வித்தியாசமான இடங்களில் மாற்றான் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கோலிவுட்டின் கரண்ட் பிஸ்னஸ் வேல்யூ படி ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சூர்யா என்று சொல்லி அதிர வைக்கிறார்கள். முன்றாவது இடத்தில் விஜயும் நான்காவது இடத்தில் கமலும் இருந்தார்களாம். தற்பொது கமலின் நான்கவது இடத்தையும் ’மங்காத்தா’ வெற்றியின் மூலம் அஜித் தட்டிக் கொண்டு போயிருகிறார் என்கிறார்கள்.

ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் அஜித், விஜய் ஆகியோரை விட நான்கு கோடி அதிகம் ஊதியம்பெரும் வாங்கும் முன்னனி ஹீரோவாகியிருக்கும் சூர்யாவின் ’மாற்றான்’ திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகிறது.

வழக்கம் போல் இவரின் இந்த படமும் ரொம்பவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா என்றால் வித்தியாசம் ,புதிய கதை என்ற எண்ணம் நமக்குள் 
இந்த படமும் நம்மை ஏமாற்றாது எனபது உண்மையாய் அமையட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக