7 ஜூன், 2012

தேர்தலில் சிதம்பரத்தின் தில்லு-முல்லு ; பதவியில் இருந்து நீக்கிட ஜெ., - பாஜ., வலியுறுத்தல்


See full size image


மதுரை: பார்லி.,மென்ட் தேர்தலில் போட்டியிட்டு அவர் பெற்ற வெற்றியில் தில்லு, முல்லு நடந்தது என்ற எதிர்வேட்பாளரின் குற்றச்சாட்டு சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணையை அமைச்சர் சிதம்பரம் சந்திக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., பா.ஜ., தலைவர் கட்காரி, ஜனதா கட்சி தலைவர் சு.,சாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த 2009 ல் நடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் ப.சிதம்பரம். இவரை எதிர்த்து அ.தி.மு.க, தரப்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் கடும் இழுபறி ஏற்பட்டடது. நள்ளிரவு வரை முடிவுகள் அறிவிக்கப்டாமல் இருந்தது. இறுசியில் சிதம்பரம் சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்த தேர்தல் முடிவில் தில்<லு, முல்லு நடந்தது என்றும் , அவரது வெற்றி செல்லாது என்றும், இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கில் தம்மை விசாரிக்க கூடாது என கோரும் மனுவை சிதம்பரம் தாக்கல் செய்திருந்தார். மனு மீதான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். சிதம்பரம் மனுவை ஏற்க முடியாது. கண்ணப்பன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் சொல்லப்பட்டிருக்கும் தேசிய வங்கி மூலம் உதவப்பட்டது என்பதை நீக்கி விடலாம்.


தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளை தேர்தல் அதிகாரியாக நியமித்து இவரது வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு ஏதுவாக செயல்பட்டனர். ஊழல் முறைகேடு மூலம் சிதம்பரம் வெற்றிக்கு அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஏஜன்ட்டாக செயல்பட்டார். என்பதையும் நீக்கிட மட்டும் முடியும். ஏனைய புகார்கள் ( முறைகேடு, சட்டமீறல்கள் ) குறித்து இப்போது நீக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவர் தேவைப்படும்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.


ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்க தவறினார் இவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும், சமீபத்தில் இவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது லாபம் அடைந்தார் என்றும் எதிர்கட்சியினரால் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதில் அளித்த சிதம்பரம் என் நேர்மையை சந்தேகிப்பதை விட என் நெஞ்சில் கத்தியால் குத்துங்கள் என்றார். இந்நிலையில் தேர்தலில் தில்லு, முல்லு செய்தார் என்ற வழக்கு சூடு பிடித்திருக்கிறது.


சிதம்பரம் பதவி விலக வேண்டும்: இது குறித்து பா.ஜ.,வை தலைவர் நிதின்கட்காரி கூறுகையில்: சிதம்பரம் மீதான புகாருக்கு பல ஆதாரங்களை பா.ஜ., கொடுத்துள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை . இன்றைய கோர்ட் உத்தரவின்படி சிதம்பரம் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இவரை காப்பாற்ற பிரதமரும், சோனியாவும் முயற்சிக்கின்றனர். என்றார். தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா கூறுகையில்: சிதம்பரம் வழக்கை சந்திக்க வேண்டுமே தவிர தன்னை விடுவிக்க வேண்டும் என கோருவதே தவறானது. கோர்ட்டின் இந்த முடிவுக்கு அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.


சிதம்பரம் பதவி விலக ஜெ., வலியுறுத்தல்: சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவை கோர்ட் ஏற்க மறுத்து விட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து விலக வேண்டும், இல்லேயேல் அவரை நீக்க வேண்டும். என தமிழக முதல்வர் கோரியுள்ளார்.


இது ஒரு பிரச்னை இல்லை, அரசியல் ஆதாயம் அடையும் முயற்சி என காங்., சார்பில் சட்டஅமைச்சர் சல்மான் குர்ஷீத், மற்றும் காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜயசிங் ஆகியோர் சிதம்பரத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


நன்றி தினமலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக