7 ஜூன், 2012

தயாரிப்பாளரை ஏமாற்றினாரா அஜித்?

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களாக இல்லை அவரது சாதாரண மனித இயல்புகளுக்காகவும் தான். ரசிகர்கள் மட்டுமின்றி அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் உள்பட அனைவரும் அஜித்தை புகழ்ந்து பேசும் போது ஒரு தயாரிப்பாளர் மட்டும் அஜித் என்னை ஏமாற்றிவிட்டார் என அஜித் மீது குற்றம் சுமத்துகிறார். 


வித்தகன் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் அவர். கே.எஸ்.ரவீந்திரன் தயாரிப்பில் அஜித் நடித்து 2003-ல் வெளியான படம் ‘என்னை தாலாட்ட வருவாளா’. 1996-ல் துவங்கிய இந்த படம் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஒருவழியாக 2003-ல் ரிலீஸானது. 


தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ‘என்னை தாலாட்ட வருவாளா’ படத்திற்கு பண உதவி செய்ததாக கூறுகிறார். மேலும் அஜித்திடம் 6 லட்ச ரூபாயை தனது அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணமாக கொடுத்ததாகவும் கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.


அந்த பணத்திற்கெல்லாம் வட்டி போட்டு கூட்டி கழித்து பார்த்தால் பில் ஒரு கோடியை தாண்டுகிறதாம். இந்த பணத்தை வாங்க எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிட தயாராகவிருக்கிறாராம். 


ஆனால் அஜித் தரப்போ இதை காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை. அஜித்தின் மேனேஜர் இதை பற்றிப் பேசி இந்த அவதூறு செய்தியை பெரிதாக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார். 


இதுவரை இவரைப்பற்றி இது போல வந்தது இல்லை..இவரை நல்ல மனிதராய் பார்க்கும்  நிலையில் இப்படி ஒரு செய்தி இது வதந்தியாகவே இருக்கட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக