15 ஜூன், 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவு ஒரு பார்வை
முதல் வாக்கு பெட்டியில் அதிமுக 498, தேமுதிக 208 வாக்குகளும் பெற்றுள்ளது. 
கடந்த 13.06.2012 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (15.06.2012) காலை 8 மணிக்கு தொடங்கியது. 
முதல் சுற்றில் அதிமுக 4,287 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 1,054 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக 3233 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 147 தபால் ஓட்டுகள் இருந்தன. அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் இவை பிரித்து எண்ணப்பட்டன. அதில், 145 வாக்குகள் அதிமுகவுக்கும், 2 வாக்குகள் தேமுதிகவுக்கும் கிடைத்தன.

நாம் எதிர்பார்த்த ஒன்று தான் வழக்கம் போல ஆளும் கட்சிக்கே வெற்றி சூத்திரம் இன்றும் தொடர்கிறது...தமிழ் நாட்டில் !


ஒரு பார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக