15 ஜூன், 2012

நடிகர் காகா ராதாகிருஷ்ணன் காலமானார்!


பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் காலமானார்!
பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார் 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். பழம்பெரும் நடிகரான அவர் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 14.06.2012 அன்று காலமானார்.
என்.எஸ்.கே.வின் "நல்லதம்பி', பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடிக்க, பானுமதி ஹீரோயினா நடித்த "ரத்னகுமார்', "சௌபாக்யவதி', "வனசுந்தரி', "மனோகரா', "வீரக்கனல்' அப்புறம் "மதுரைவீரன்', "தாய் மகளுக்குக் கட்டிய தாலி', "தாய்க்கு பின் தாரம்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் காகா ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். 
கமலோடு "தேவர்மகன்', "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்', விக்ரமோடு "கண்சிமிட்டும் நேரம்', விஜயோடு "காதலுக்கு மரியாதை', பிரபுவோடு "வியட்நாம் காலனி', பிரபுதேவாவோடு "பெண்ணின் மனதை தொட்டு', "ஏழையின் சிரிப்பில்..', அஜித்தோடு "பவித்ரா', கே.பாலசந்தரோடு "ரோஜா வனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.  .
கலைஞரின் வசனத்தில் உருவான 'மனோகரா' படத்தில் வசந்தன் என்ற கேரக்டரில் நடித்து பெயர் பெற்றவர். பிற்காலத்தில் நடிகர் கமல் தனது 'தேவன் மகன்' படத்தில் சிவாஜியின் சகோதரனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் நாற்காலியில் கம்பீரமாக காட்சியளிப்பார். 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கேரன் போர்டு விளையாடுகிற கேரட்டரில் நடித்து இன்றைய இளைஞர்களையும் கவர்ந்தவர்.

திமுகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக