18 ஜூன், 2012

கலகம் என்று கருணாநிதி கூறியதை பெரிய குறையாக எடுக்கக்கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கலகம் என்று கருணாநிதி கூறியதை பெரிய குறையாக எடுக்கக்கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது 

கேள்வி- ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப்முகர்ஜியை அப்துல்கலாமுடன் ஒப்பிட முடியுமா?


பதில்- ஏன் முடியாது. பிரணாப்முகர்ஜிக்கு ஜனாதிபதி பதவிக்கான அனைத்து தகுதிகளும் உள்ளது. அவர்தான் ஜனாதிபதிக்கு தகுதியான நபர். அவரிடமும் திறமையும், நேர்மையும் உள்ளது. 

கேள்வி- பிரணாப் முகர்ஜி மீது அன்னாஹசாரே குழுவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்களே?

பதில்-அதில் எள்ளளவும் உண்மை கிடையாது. அன்னாஹசாரே ஊழல் குற்றம் சுமத்தாத ஒரே ஆள் கடவுள் மட்டும்தான். 

கேள்வி- மக்களால் அதிகம் நேசிக்கப்படும் அப்துல்கலாமை ஏன் காங்கிரஸ் நிராகரித்தது? 
பதில்- அப்துல்கலாம் 5 ஆண்டுகள் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து விட்டார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. எனவே இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு பதவி ஆசை இருப்பதாக காட்டிக் கொண்டால் அப்துல்கலாம் மீதான அந்தஸ்து, மரியாதை போய்விடும். அதற்குமாறாக அப்துல்கலாம் பிளாஸ்டிக் கினை நிரந்தரமாக ஒழிக்க மாற்றுப்பொருளை கண்டுபிடிக்க வேண்டும். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் செல்ல இனிமேலும் ஆசைப்பட கூடாது. 

கேள்வி-முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி அப்துல்கலாமை கலகம் என்று கூறியது சரியா? 
பதில்- கலைஞர் வார்த்தை விளையாட்டில் வல்லவர். அதை நகைச்சுவை உணர்வுடன்தான் சொல்லி இருப்பார். அதை பெரிய குறையாக எடுத்து விமர்சிப்பது தவறு. 

கேள்வி- முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜனாதிபதி பதவிக்கு சங்மாவை ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறாரே? 
பதில்- இது ஜெயலலிதாவின் தகுதிக்கு மீறியவிஷயம். வேண்டுமானால் சங்மாவை ஜெயலலிதா தமிழகத்துக்கு அழைத்து வந்து ஏதோ ஒரு வாரியத்துக்கு தலைவர் ஆக்கலாம். அதைவிட அந்தஸ்தான பதவிகொடுக்க விரும்பினால் யானைகளுக்கென தனியாக ஒரு வாரியம் அமைத்து அதற்கு சங்மாவை தலைவர் ஆக்கலாம். அதுதான் ஜெயலலிதாவால் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக