6 ஜூன், 2012

குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி...


குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி 




குற்றாலம் பகுதியில் நேற்று மாலை முதல் சிலு,சிலு காற்று வீசுகிறது. மெல்லிய சாரல் விழுந்ததால் சீசன் விரைவில் துவங்கும் அறிகுறி தெரியவந்துள்ளது.

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜீன்,ஜீலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த சமயத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.




லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவி களில் குளித்து மகிழ்வர். சீசன் சமயங்களில் தென்றல் காற்று வீசுவதுடன், அவ்வப்போது சாரல் மழை பெய்தும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்.

கடந்தாண்டு சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1ந்தேதி முதல் சீசன் துவங்கியது. அருவிகளிலும் தண்ணீர் விழ ஆரம்பித்தது. ஆனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்த பிறகும் குற்றாலம், தென்காசி பகுதியில் வெயில் அடித்தது.

மேலும் தென் மேற்கு பருவமழை துவங்க காலதாமதம் ஆனதாலும் குற்றாலத்தில் சீசன் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 
காலம் தாமதம் ஆனாலும் அருவின் சாரல் அதி விரைவில் மக்களை நனைக்கட்டும்...


இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்ய துவங்கி விட்டதால் குற்றாலத்தில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. மேலும் மேக கூட்டம் திரண்டு வந்து, லேசான சாரல் விழுந்தது.

இன்று காலையும் வெயில் அவ்வளவாக இல்லை. காற்று வீசி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்கள் அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கி விடும் என்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சீசனை எதிர்நோக்கியுள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்..


நாமும் குற்றாலத்தில் குளிக்க தயாராகுவோம்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக