7 ஜூன், 2012

கொசு என்கிறீர்கள்; கொசுவை அடிக்க ஏன் இத்தனை ஆயிரம் பேர் வருகிறீர்கள்? :




கொசு என்கிறீர்கள்; கொசுவை அடிக்க ஏன் இத்தனை ஆயிரம்
பேர் வருகிறீர்கள்? : விஜயகாந்த் பேச்சு






புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் என்.ஜாகிர்உசேனை ஆதரி்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.




அப்போது பேசிய அவர்,   ‘’இடைத்தேர்தல்களில் வாக்குக்கு பணம், பொருள் கொடுக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் இருப்பதால்தான் இங்கு ஆளும்கட்சி வெற்றிபெறுகிறது. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லை. ஆளும் கட்சி வெற்றி பெற்றால்தான் நல்லது செய்வார்கள் என்பது தவறான பிரச்சாரம் ஆகும்.




  இத்தொகுதியில் ஜெ.பிரச்சாரம் மேற்கொள்ள செல்லும் சாலைகள் மட்டும் உடனே சீரமைக் கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் செல்லும் சாலை குண்டும், குழியுமாகவே உள்ளது. அந்தவழியில்தான் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.



சங்கரன்கோவிலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டது. ஆனால், புதுக்கோட்டையில் நானும் நீங்களும்தானே போட்டியிடுகிறோம். அப்புறம் எதற்கு 32 அமைச்சர்கள், 52குழுக்கள், 5 ஆயிரம் கார்களில் வலம் வரவேண்டும். 


எங்களைப்பார்த்து கொசு என்று கூறுகிறார்கள். இந்த கொசுவை அடிக்க இத்தனை ஆடம்பரம்.  அப்படி என்றால் இந்த பயமே போதும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றுவிட்டது.


     இப்போது வரும் அமைச்சர்கள் உங்கள் வீட்டு விழாக்களைக்கூட அவர்களே விருந்து கொடுத்து நடத்துவார்கள். ஆனால், 12-ம் தேதிக்குப்பிறகு ஓடிப்போவார்கள்.


  இலவசங்களால் ஏழ்மையை போக்கமுடியாது. ஏழ்மையை போக்க அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை. 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை செய்த நீங்கள் இந்த இடைத்தேர்தலுக்கு இத்தனைபேர் ஏன் வரவேண்டும்.


   நான்வந்தால் மக்கள் தன்னெழுச்சியாக கூடுவார்கள். ஆனால், அதிமுகவுக்கு காசு கொடுத்தால்தான் கூடுவார்கள்.  அதிமுக ஆட்சியில்தான் சுனாமி, கும்பகோணம் பள்ளி தீவிபத்து, திருச்சி திருமண மண்ட விபத்து அடுமட்டுமல்லாமல் தற்போதும் இவர்கள் ஆட்சியில்தான் சுனாமிவந்துள்ளது நல்லவர்கள் ஆண்டால் நல்லதே நடக்கும்.  நான் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்துள்ளதால் வாக்காளருக்கான பணம் திட்டமிட்டதைவிட அதிகரித்துவிடும்.     






   ரூ. 75 லட்சம் பறிமுதல் செய்ததை பெரிதாக பேசும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்காக ஆளும் கட்சி கொண்டுவந்துள்ள ரூ. 1000 கோடி பாதுகாப்போடு  தொகுதிக்குள் அனுப்பிவைத் துள்ளார்கள். அதை, தேர்தல் அலுவலர்கள், காவல்துறை மூலம் ரேஷன் கார்டில் உள்ள பெயர் பட்டியல்படி பணம் கொடுக்க திட்டமிடப் பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.


- செம்பருத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக