6 ஜூன், 2012

ஆ. ராசா தமிழ்நாட்டுக்கு வர அனுமதி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை கடந்த 15-ந் தேதி  சி.பி.ஐ. கோர்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.


ஆனாலும்,  ஆ.ராசா டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும். 


கோர்ட்டு அனுமதி பெறாமல் தமிழ்நாட்டுக்கோ, மத்திய தொலைத்தொடர்புத்துறை அலுவலகத் துக்கோ செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். 


அம்மனுவில்,  ‘’நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அங்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலும் இருப்பதால் கட்சிப் பணியாற்ற வேண்டும். 

சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஜூன் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோடை விடுமுறை.

அதனால் தினமும் விசாரணை இருக்காது. எனவே இந்த காலகட்டத்தில் நான் சென்னைக்கும், நீலகிரிக்கும் சென்றுவர அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். 


இம்மனுவை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு கோர்ட்,  ஆ.ராசா தமிழ்நாட்டுக்கு வர அனுமதி வழங்கியுள்ளது.

நன்றி நக்கீரன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக