பெங்களூரு: கடந்த 48 மணிநேரமாக கர்நாடகா போலீசாரால் தேடப்பட்ட நித்யானந்தா இன்று பிற்பகல் 3 மணி அளவில் ராம்நகர் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும், ஆசிரமத்திற்கு சீல் வைப்பதை தடுக்க கோரியும், நித்யானந்தா தாக்கல் செய்த மனு கர்நாடகா ஐ கோர்டில் இன்று நடந்த விசாரணை நாளை மறுநாள் (15ம் தேதி) வரை தள்ளி வைக்கப்பட்டது.
ஆர்த்திராவ் என்பவர் கன்னட "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நித்யானந்தா, ஜூன் 7ம் தேதி பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்கள் கூட்டம் நடத்தினார்.
அதில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நீதிமன்ற சம்மன் குறித்து, கன்னட "டிவி' நிருபர் கேட்ட கேள்வியால் கன்னட "டிவி' நிருபருக்கும், சீடர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கன்னட "டிவி' நிருபருக்கு அவமரியாதை ஏற்பட்டதாக, கன்னட அமைப்பினர், ஆஸ்ரமம் முன் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்த்திராவ் , நித்யானந்தா மீது கூறியுள்ள பாலியல் புகார் அடிப்படையில் கர்நாடகா அரசு பிடதி ஆசிரமத்தினை சீல் வைக்கவும், நித்யானந்தாவை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வந்தது.இதனை எதிர்த்து நித்யானந்தா கர்நாடகா ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார்.
நித்யானந்தா சார்பில் அவரது வழக்கறிஞர் , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மதியம், ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில், கடந்த 7, 8ம் தேதிகளில் பிடதி ஆஸ்ரமத்தில் நடந்த ரகளையில், நித்யானந்தா, அவரின் சீடர்கள் எட்டு பேர் மீது பிடதி போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. இதில், அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.
இம்மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதில் எந்த அடிப்படையில் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், கேட்டுள்ளது. எனவே வெள்ளிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்யானந்தா மனு விசாரணை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நித்யானந்தா சரண்: நித்யானந்தா எந்நேரமும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று பெங்களூரு ராம்நகரம் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா இன்று கோர்ட்டில் சரணடைந்தார்.
அதன்படி இன்று மதியம் 2.55 மணிக்கு ராம்நகர் மாவட்ட கோர்ட்டிற்கு காரில் வந்தார். நேராக நீதிபதி முன்பு சென்று தான் சரணடைவதாக கூறினார். அவரை ஒரு நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி கோமளா உத்தரவிட்டார். மேலும் அவர் நாளை காலை 11 மணியளவில் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இதன்மூலம் கடந்த 48 மணிநேரமாக கர்நாடகா போலீசாரால் தேடப்பட்ட நித்யானந்தா சரணடைந்ததால் ஐகோர்ட் பரபரப்புடன் காணப்பட்டது.நன்றி தினமலர்

பரபரப்பு சாமியாராய் சில மாதமாய் இவர்! தலைப்பு செய்திகளில்,சிரிப்பு செய்திகளாய் வளம் வந்து கொண்டுஇருக்கும் இவருக்கு ஆதரவு ஒருப்பக்கம் ,எதிர்ப்பு பல திசைகளில் தொடர்ந்த வண்ணமாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக