6 ஜூன், 2012

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!


டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!


டாஸ்மாக் கடையை தமிழக அரசு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், இந்த மனு விசாரிக்க தகுதியற்றது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளனர்.


மேலும், இது குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசனத்தின் 47ம் பிரிவின்படி, போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு முரணாக மதுபானத்தை அரசே விற்பனை செய்கிறது. இதன் மூலம் சட்டம்   ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
------------------------------------------------------------------------------


மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் 
போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்






பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ’’மதுவின் தீமையில் இருந்து மக்களை விடுவிக்க தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,

வரும் ஜூலை 11-ம் தேதி மதுக்கடைகளை இழுத்துமூடி பூட்டுபோடும் போராட்டம் நடத்துவது என்று சென்னையில் நேற்று எனது தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தி்ல் முடிவெடுக்கப்பட்டது. 


அதன்படி தமிழகத்தில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் பாமக சார்பில் பூட்டுபோடும் போராட்டம் நடைபெறும்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக