20 ஜூன், 2012

ஒரே அறையில் வீரபாண்டிஆறுமுகம் - பாரப்பட்டி சுரேஷ்குமார்...

 

வேலூர் சிறை : ஒரே அறையில்
வீரபாண்டிஆறுமுகம் - பாரப்பட்டி சுரேஷ்குமார்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ் குமாரும், வேலூர் சிறையில், ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, உளவுப்பிரிவு போலீசார் அனுப்பிய அறிக்கை, அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் முன்னரே, அவரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் சிறையில், மாஜி அமைச்சருக்கு முதல் வகுப்பு (ஏ கிளாஸ்) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு, இரண்டாம் வகுப்பு (பி கிளாஸ்) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இருவருக்கும் ஒரே அறை தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஜி அமைச்சருக்கு கட்டில் வசதி மட்டும் கூடுதலாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதால், மாஜி அமைச்சருக்கு தேவையான அனைத்து உதவிகளும், எவ்வித தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. அது மட்டுமின்றி, மாஜி அமைச்சரை பார்க்க வரும் கட்சியினர், உறவினர்கள் அனைவருமே பாரப்பட்டி சுரேஷ்குமாரையும் சந்தித்துச் செல்கின்றனர்....
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக