8 ஜூன், 2012

விஜய் பிறந்தநாள் அன்று அஜித் தரும் ட்ரீட்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு விஜய் கௌதம்மேனன் இயக்கும் ’யோஹான் அத்தியாயம்-1’ படத்தில் நடிக்கிறார்.


அதன் பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ’தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இரு இயக்குனர்களும் தங்கள் படத்திற்கான வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். 


ஜூலையிலிருந்து யோஹன் படப்பிடிப்பு துவங்கும் என கௌதம் மேனன் அறிவித்த சில நாட்களில், இயக்குனர் விஜய் “ விஜய்யை வைத்து நான் இயக்கும் படத்திற்கு ‘தலைவன்’ என்ற பெயர் சூட் ஆகவில்லை. எனவே அந்த பெயரை மாற்றவிருக்கிறேன்” என அறிவித்துள்ளார்.  


கௌதம் மேனன் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படம்.  ஏ.எல்.விஜய் இயக்கிகொண்டிருக்கும் தாண்டவம் படம் செப்டம்பர் மாதம் தான் ரிலீஸாகிறது என்பதால் யோஹன் படப்பிடிப்பு முடிந்ததும் ஏ.எல்.விஜய் படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா-2. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பில்லா-2, இந்த மாதம் ரிலீஸாகும் என்பதை மட்டும் தெரிவித்துள்ள படக்குழு ரிலீஸ் தேதி பற்றிய எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. 


ஜூன் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸாகும் என சில செய்திகள் திரையுலகில் வலம் வந்தாலும், இது வரையிலும் அந்த செய்திகள் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற ஜூன் 22-ஆம் தேதி பில்லா-2 ரிலீஸாகவிருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். 


எப்படியும் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கும் படம் பற்றி பரபரப்பாக பேச என்ன இருக்கிறது? என்று கேட்காதீர்கள். ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் 38-வது பிறந்தநாள். பில்லா-2 படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.


தளபதி பிறந்தநாளில் தல படம் ரிலீஸானால் அவர்களது ரசிகர்களுக்கிடையிலாவது ஒரு ஒற்றுமை உண்டாகட்டும். 
மற்றவர்களுக்கு இது ஒரு முன் மாதிரியாய் அமையட்டும் 
ஜூன் 11-ஆம் தேதி பில்லா-2 படத்தின் ஒரு பதிப்பு சென்ஸார் குழுவிற்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக