பூக்களுடன் என்ன வருத்தம்
வஞ்சி அவள் உன்னை காணவே
வாசலியில் நிற்கிறாள் பேசவே...!
நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே...!
சூரியனே!இன்னுமா தயக்கம்
தாமரைக்கு உன் மீது மயக்கம்
உன் வருகை கண்டே மலரும்
நீ போனால் தானே நிகழும்..!
தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்
பூக்களின் ஏக்கம் தீருங்கள்
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக