13 ஜூன், 2012

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி....

புதுக்கோட்டை தொகுதியில்  விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு 


 புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980. இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 371 பேர். பெண்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 604. இதர வாக்காளர்கள் 5 பேர். தேர்தல் பிரசாரம் 10-ந்தேதி மாலையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது.

மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 37 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசுப் பணியில் உள்ள நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும் முன்பே புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கியதும் கூட்டம் மேலும் அதிகமானது.

புறநகர் பகுதியில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு 9 மணிக்கு மேல் விறு, விறுப்படைந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் 73. சதவீதம் வாக்குப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே வெற்றி பெற்றவர் யார் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டு விடும்.

யார் புறக்கணிப்பதாக,சொன்னாலும்  பொதுமக்கள் ஒட்டு போட்டு வருவது நாம் கண்ட உண்மைதான்..,அதிமுக சொன்ன போது கூட இதே நிலை தான் கடந்த திமுக ஆட்சிலும் நிகந்து வந்தது நாம் அறிந்த ஒன்று தான் ஆளும் கட்சிகளே வெற்றி பெரும் நிலைதான் காலம் காலமாய் நாம் கண்டது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக