15 ஜூன், 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்! டெபாசிட் வாங்கியது தேமுதிக!


புதுக்கோட்டை இடைத்தேர்தல்! டெபாசிட் வாங்கியது தேமுதிக! ஜெ.வை சந்திக்க அதிமுக அமைச்சர்களுக்கு பயம்!
கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை எதிர் கட்சி டெபாசிட் பெற்ற நிலியலில் தான் அதிமுக வின்  வெற்றி என்ற அளவுகோல்...


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
பிரச்சாரத்திலும் அதிமுகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தேமுதிக 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தேமுதிக தனது டெபாசிட்டை பெற்றுவிட்டது.
இதனால் தேமுதிகவினர் உற்சாகம் அடைந்தனர். வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடியதுடன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
தேமுதிக டெபாசிட் வாங்கியதால், அதிமுக அமைச்சர்கள் கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்திக்க நடுங்குகின்றனர். புதுக்கோட்டையில் தங்கியுள்ள அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பீதியில் உள்ளனர்.


நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக