7 ஜூன், 2012

ஜெயலலிதா மீது வழக்கு தொடருவேன் : விஜயகாந்த்...


ஜெயலலிதா மீது வழக்கு தொடருவேன் : விஜயகாந்த்


  புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் என்.ஜாகிர்உசேனை ஆதரி்த்து ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,   ’’ரூ. 500 கோடி  மக்கள் வரிபணத்தில் தமிழகத்தில் ஓராண்டிலேயே சாதித்துவிட்டதாக இந்தியா முழுவதும் விளம்பரம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நீதிமன்றத்துக்கு இழுப்பேன்.   


மத்தியஅரசு பெட்ரோல் விலையில் ரூ. 8 உயர்த்தி அதில் ரூ. 2 ஜ குறைத்தது. இதை கண்துடைப்பு நாடகம் என கூறும் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில்  மின்கட்டணத்தை உயர்த்தி அதில் சிறிதளவு குறைத்தது நாட்டியமா?.       
  சட்டமன்றத்தில் ஒரு ஆணைப்பார்த்து ஒரு பெண் எப்படி பேசவேண்டுமோ அப்படித்தான் பேசவேண்டும். 


ஆனால்,நாகரிகமில்லாமல் பேசுவதாலும், நாங்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேச முன்வந்தால் எங் களை கூண்டோடு வெளியேற்றுதை வழக்கமாக கொண்டி ருப்பதால் நான் எப்படி அங்கு வரமுடியும். அதனால்தான் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.


      மணல் கொள்ளையே நடக்கவில்லை என முதல்நாள் கூறும் முதல்வர், அடுத்தநாள் அமைச்சர் தங்கமணி மணல் கொள்ளையில் ஈடுபட்டோரிடம் ரூ. 13 கோடி தண்டத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறிதால்  மணல் கொள்ளையர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்கிறார்.


   முதலமைச்சர் வந்தால் 2 கிலோமீட்டருக்கும் அப்பால் மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. நான் பேசினால் தேர்தல் விதிமீறல் என்று என்மீது வழக்கு பாய்கிறது.  சேலம் மாநாட்டில் தொண்டர்களின் வேண்டுகோளுக்கினங்க அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். நான் தலைகுனிந்தாலும், மக்களை தலை குனிய விடமாட்டேன்.


   என்னைப்பார்த்து திராணி இருக்கிறதா என்றும் கூறும் முதலமைச்சர் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற 5 இடைத்தேர்களை புறக்கணித்துவிட்டு கொடநாடு சென்றது யார்.


  இத்தொதியில் அதிமுக தோற்றாலும் ஆட்சியில் மாற்றம் வராது. ஆனால், 4 ஆண்டுகள் மக்களுக்கான ஆட்சியாக மாற்ற முடியும். தேதிமுதிகவை வெற்றி பெறச்செய்து ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டுங்கள்.


  இம்மாவட்டத்தில் தொழில்சாலைகள் இல்லாததால் வேலைக்காக இளைஞர்கள் வெளிநாடு செல்கிறார்கள். கல்வியையும் விவசாயத்தையும் ஒன்றாக வளர்க்க வேண்டும். அதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் செய்யமுடியும். மேலும், குடிநீர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்’’ என்றார்.

- செம்பருத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக