6 ஜூன், 2012

பொறியியல் படிப்பில் சேர...





பொறியியல் படிப்பில் சேர, எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, 2.2 லட்சம்மாணவர்கள் ஆர்வம் காட்டியபோதும், நேற்று வரை 1 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணாபல்கலைக்கு அனுப்பினர். 


கடைசி நாளான இன்றுமாலைக்குள், மேலும் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


வினியோகம்: மே 11 முதல், 31ம் தேதி வரை, பொறியியல்விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வுமுடிவுக்கு முன், விண்ணப்பம் வினியோகம் துவங்கியதால், ஏராளமான மாணவ, மாணவியர் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் வாங்கினர்.இதனால், அச்சடித்த 2 லட்சம் விண்ணப்பங்கள், மே கடைசி வாரத்தில் காலியாயின.விண்ணப்பம் இல்லாமல் வினியோகம் நிறுத்தப்பட்டு, கூடுதலாக 40 ஆயிரம்விண்ணப்பங்களை அச்சிட்டு, அண்ணா பல்கலை சமாளித்தது. இறுதி நாள் நிலவரப்படி, 2லட்சத்து 28 ஆயிரத்து 243விண்ணப்பங்கள் விற்பனை ஆயின.


நேற்று வரை 1 லட்சம்:பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: 
  இன்று (நேற்று) மாலை வரை, ஒரு லட்சத்து 5 ஆயிரம்விண்ணப்பங்கள் வந்துள்ளன. நாளை (இன்று) மேலும்,அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேரும். 6ம் தேதி தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள், தாமதமாகத் தான் வந்து சேரும். தபாலில், 6ம் தேதியோ, அதற்கு முன்போதேதி முத்திரையிடப்பட்டு,தாமதமாக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், அவைஅனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். 


விண்ணப்பங்கள் குறைவாக வந்ததாக கருத முடியாது. ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது போல் தான், இந்த ஆண்டும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று உத்திரியராஜ் கூறினார்.
கவுன்சிலிங் இடங்கள்:தற்போதைய நிலவரப்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1.6 லட்சம் இடங்கள் உள்ளன. கவுன்சிலிங் நேரத்தில், கூடுதலாக பல புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிவழங்கும்பட்சத்தில், கவுன்சிலிங் ஒதுக்கீட்டு இடங்களின்எண்ணிக்கை அதிகரிக்கும். 1.7 லட்சம் இடங்கள் வரை,கவுன்சிலிங்கிற்கு கிடைக்கும்.ஆனால், 1.5 லட்சம் பேர்மட்டும் விண்ணப்பிக்கும்பட்சத்தில், அனைவருக்கும் இடம் 
கிடைப்பதுஉறுதி. ஆனால், கவுன்சிலிங்போது, 


எவ்வளவு பேர், "ஆப்சென்ட்' ஆவர், கவுன்சிலிங்கிற்கு வந்து எவ்வளவு பேர், "சீட்'டைநிராகரிப்பர் எனக் கூற முடியாது. ஏனெனில், கடந்த ஆண்டு அழைக்கப்பட்ட மாணவ,மாணவியரில், 25.64 சதவீதம் பேர், "ஆப்சென்ட்!'.
காலியிடங்கள் அதிகரிக்கும்?: கடந்தாண்டு, 45 ஆயிரம் இடங்கள் பூர்த்தியாகாத நிலையில், இந்த ஆண்டு காலியிடங்கள்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கவுன்சிலிங் ஒதுக்கீட்டிற்கு 1.60 லட்சம் இடங்கள் வரும் என, ஏற்கனவே கணக்கிடப்பட்ட நிலையில், புதிய கல்லூரிகளின் வரவால் மேலும் 5,000 இடங்கள் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு, ஜூன் 6ம் தேதி கடைசி நாள்.


நன்றி தினமலர் 
கலந்துக்கொள்ளும் மாணவ ,மனைவிகள் அனைவரும் வெற்றியடைய வாழ்த்துவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக