சென்னை, ஜூன். 5-
காயிதே மில்லத்தின் 117-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் உள்பட முஸ்லிம் கட்சியினரும் மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வசந்தி ஸ்டான்லி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, செங்கை சிவம், பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், சுரேஷ்குமார் ஆகியோர் ஊர்வலமாக சென்று மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஜே.எம்.ஆரூண் எம்.பி., ராயபுரம் மனோ, ஜி.ஆர்.வெங்கடேஷ், வி.பி.ஜவஹர்பாபு, ரங்க பாஷ்யம், புல்லட் சாகுல், எஸ்.கே. நவாஸ், அகரம் கே.பி.அலி.
தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சீமா பஷீர், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன் ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மாநில பொருளாளர் முகம்மது யூசுப், வன்னி அரசு, மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, இரா.செல்வம், ஆளுர் ஷாநவாஸ், முபாரக், ராயபுரம் அகமது, அஜ்மல்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் எம்.பி., தேசிய லீக் பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியான்கான் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி வணங்கினார். அவருடன் நிர்வாகிகள் எஸ்.துரை, திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன், எஸ். வேதா, ஏ.முரளி, வைத்தியநாதன், கே.ஜி.எஸ்.சுரேஷ், என்.ராஜசேகர், தாமு, சுனில், ராஜி கே.சுரேஷ் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத் தலைவர் கா.லியாகத் அலிகான் தலைமையில் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தப்பட்டது. இயக்கத்தின் துணைத் தலைவர் பிலோமின் ராஜ், செயலாளர் யாசின் அகமது, பொருளாளர் எஸ்.ராமலிங்கம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.ஏ.நாகூர் மீரான் மற்றும் அன்பு சரீப், வண்ணை அபுபக்கர், கம்பம் சுல்தான், பஷீர் அகமது, பீர் முகமது, அபுல் ஹசன் உள்ளிட்ட பலர் மலர் மரியாதை செலுத்தினர்.
நன்றி ...மாலைமலர்...
பயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு