18 மே, 2012

எதிர்பார்ப்பு...
கலகங்கள் காட்சியாய்...
சாட்சி சொல்லும் 
மனித நேயத்தின் 
விழ்ச்சிகளை!


இனம் கண்டு,கொலை.
மதம் பிடித்து ரகளை
செய்தவர்கள் எல்லாம் 
இன்னும் இங்கு...


ஏமாற்றமாய் போனதால் 
எதிர்ப்புக் கூட 
ஒதிங்கிக் கொண்டன 
ஏன் வம்பு என்று...


எதிர்ப்புக் காட்ட 
போராட்டம் .
போராட்டம் கலவரமாய் 
மாறியதில்...


மீண்டும் இங்கு இழப்பு 
மனிதனுக்கு மட்டுமே!


எதிர்ப்பும், எதிர்பார்க்கும்,
மனித நேயம் பிறக்காதா என்று !


எதிர்பார்ப்புகளுடன் 
இன்னும் அப்பாவி மனிதன்
இன்றும் இங்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக