19 மே, 2012

ஈர்ப்பு...காலைக் கதிர் 
வீசும் மார்கழி 
மாதத்து பனி.


காலைநேர தேநீர் 
உடன் பத்திரிகை.


தூக்கத்தோடு...
புதுக் கோலத்தோடு 
வந்து கோலம் போடும் 
இளசுகள்...
தெருவை அலங்கரிக்கும் 
கோலங்கள்!


தாயின் தாலாட்டு 
அப்பாவின் சிரிப்பு 


நண்பனின் அன்பு
நண்பர்களோடு அரட்டை...


அந்திப்பொழுது 
தூக்கம் மறுக்கும் இரவு,
தூண்மையான  உறவு ..


பாட்டி விற்கும் மாங்காய் 
காவேரிக் கரை குளியல் 


ஊர் டென்ட் தியேட்டரில் 
ஓடும் படம்.மனைவின் அரவணைப்பு.
பிள்ளைகளின் உயர்வு 


பேரக்குழந்தைகளின் 
விளையாட்டு ...இவை எல்லாமே 
ஒரு வித ஈர்ப்பு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக