இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம். உலகில் அதிக மொழிகள் வழங்கு நிலப்பரப்புகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின் படி இந்தியாவில் 29 மொழிகள் 1 பத்து இலட்சம் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் 10 000 மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. இந்திய மொழிகள் என்ற இக் கட்டுரை இந்தியாவில் வழங்கும் மொழிகளைப் பற்றியதாகும்.
பெரும்பாலன மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆஸ்திர-ஆசிய மொழிகள் மற்றும் வேறு சில மொழிகாளும் பேசப்படுகின்றன.இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
இந்தியாவின் அலுவல் மொழி இந்தி ஆகும். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
அசாமியம் -
வங்களாம் -
குசராத்தியம் -
இந்தி -
கன்னடம் -
கசுமீரியம் -
கொங்கணியம் -
மலையாளம் -
மணிப்புரியம் -
மராத்தி -
நேபாளி -
ஒரியம் -
பஞ்சாபி -
சமசுகிருதம் -
சிந்தியம் -
தமிழ் -
தெலுங்கு -
உருது -
மைதிலியம் -
போடோயம் -
சாந்தளியம் -
தோக்ரியம் -
மரபு வழி ஊடகங்களில் இந்திய மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள், இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை பெரும்பான்மையாக இந்திய மொழிகளிலேயே உள்ளன. இது இன்றும் இந்திய மொழிகள் பெரும்பான்மை இந்திய மக்களின் அன்றாட தேவைகளுக்கு அவசியம் என்பதை உணர்த்துகிறது. ஆனால் இணையத்தில் இந்த நிலை தலைமாறாக உள்ளது. இணையத்தில் இந்திய மொழிகள் தேக்க நிலையிலேயே உள்ளன.
சுமார் 162 000 000 வலைத்தளங்கள் தற்போது உள்ளன. இவற்றுள் ஆக 1250 மட்டுமே மொத்தமாக இந்திய மொழிகளில் உள்ளன என்று Internet and Mobile Association of India வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 1 000 000 000 மக்களைக் கொண்ட இந்தியாவில் 60 000 000 இணையப் பயனர்கள் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இது ஒரு தேங்கிய நிலைப்பாடே. மிகவும் மெதுவான வளர்ச்சிக்கு இணையம் இன்னும் பிற மொழியில் பெரிதும் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
இணையத்தில் உள்ள இந்திய மொழி உள்ளடக்கத்தில் 19 % வீதம் தமிழில் உள்ளது. இந்திய மொழிகளுக்கிடையே ஒப்பீட்டளவில் இது சிறந்த நிலைதான். ஆனால் முன்னேற நிறைய இடம் உள்ளது....
இன்றைய இந்திய மொழிகளில் இந்தி, குஜராத்தி, வங்காளம் போன்ற வடஇந்திய மொழிகளிலிருந்தும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய திராவிட மொழிகளிலிருந்தும் ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
4.7.1 இந்தி
வட இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் இந்திமொழி மிகக் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. துளசிதாசரின் இராம சரித மானஸ் என்ற பக்தி இலக்கியம் கிட்டதட்ட ஆறு பேரால் மொழிபெயர்த்துத் தமிழில் தரப்பட்டுள்ளது. ஜெய சங்கர பிரசாத் படைத்துள்ள காமாயனி என்ற காப்பியம் காமன்மகள் எனும் நூலாகத் தமிழில் ஜமதக்னி என்பவரால் தரப்பட்டுள்ளது. பிரேம்சந்த்தின் புகழ்மிகு சிறுகதைகள் பல தொகுப்புகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன. இவையன்றி இந்திச் சிறுகதைகள் என்ற தொகுப்பும் சாகித்ய அகாடெமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகளால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
கர்மபூமி என்ற பிரேம்சந்த்தின் நாவல் அறக்கோட்டம் என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. சுதர்சன், தர்மவீர் பாரதி, ஸ்ரீலால், கோவிந்த வல்லபன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கமலாகாந்தவர்மனின் நாடகம், அடிவானத்திற்கு அப்பால் என்ற பெயரிலும், மோகன் ராகேஷ் என்பவரின் நாடகம் அரையும் குறையும் என்ற பெயரிலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சாகித்ய அகாடெமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இந்தி மொழி நாவல், சிறுகதை போன்றவற்றைப் பெருமளவில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளன.
ராகுல சாங்கிருதியாயன் படைத்துள்ள சிம்ஹசேனாபதி என்ற நூலைக் கண. முத்தையா வால்காவில் இருந்து கங்கை வரை என்ற பெயரிலும், மாஜினி சிந்து முதல் கங்கை வரை என்ற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக