2 மே, 2012

உறவுகளின் ஊமை வேடம்...



உறவுகள் இறைவன்
தந்த அற்புதத்தில் ஒன்று.

பாலைவனத்தில் 
தாகம் தீர்க்கும் 
தண்ணீராய் உறவுகள்.

ஊன்றுகோலாய் உதவும்
உறவுகளே...

காலத்தின் மாற்றத்தாலும் 
தலைமுறைகளின்
செயல்களால்...


தவறாய் மாறி
தட்டிக்கேட்கும் போது
தடுமாறும்...
நிலை மாறும்.

நரமில்லாத நாக்கு
ஆயுதமாய் போர் தொடுக்க
எதிர் அணியாய் உறவுகள்
இப்பொழுது...

அருகதையற்ற வாதங்கள்
 வாழ்ந்த அந்தக் 
காலத்தை எட்டி உதைக்கும்.


உறவு என்ற எண்ணத்தில்
கரையை போக்க
உண்மையை  சொன்னதால்,
தட்டிக்கேட்டதால்...


யார் இவன் என்னை
கேட்க என்ற முனங்கள்
முழக்கமாய் வரும்..


தட்டிக்கேட்டவன் நிலையோ 
பரிதாபம்.



தவறுகள் இங்கு மறுக்கப்பட்டு
மறைக்கப்பட்டு 
மனசாட்சிகள் கொன்றுவிட்டு 
நீதி வழங்கப்படுகிறது.

யாருக்காக இந்த நிலை 
முகம் காட்ட மறுக்கப்பட்டு 
பேச மறுக்கும்  உறவுகளே...

உண்மையை உணர 
இன்னொரு பிறவியா 
வேண்டும்....

கொஞ்சம் உணருங்கள்
உள்ளத்தில் கைவைத்து
கேளுங்கள்


காரணத்தை உணர்ந்தவார்களே 
இன்னும் எத்தனை நாளைக்கு ?
ஊமை வேடம்?


உண்மையின் ஊர்வலம்
வரும்போது உங்களை
உரித்துப்பார்க்கும்.


உறவுகள் மரணமாய்
உணர்வுகள் அற்ற ஜடமாய்..
என்னடா வாழ்க்கை இது ...


நேற்று வரை உறவு
என்று சொன்னதெல்லாம்
உண்மை என்றால் 
பிளவுக்கு பரிதுரைக்கும்
எண்ணம் ஏனோ?


எல்லாம் அறிந்த 
தெளிவில்லாத  உறவுகள்
இருந்தால் என்ன
விலகினால் என்ன
எல்லாம் ஒன்று தானே...

3 கருத்துகள்:

  1. அஹா... உரைக்கும் உண்மைகள்.... சற்றே வலிக்கும் உண்மைகளும்... அனுபவம் எனக்கும்...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் உள்ள அனுபவமே இந்த கவிதையின் கரு தோழியே .நன்றி உங்கள் வருகைக்கு,கருத்துக்கு...

    பதிலளிநீக்கு
  3. நரமில்லாத நாக்குஆயுதமாய் போர் தொடுக்கஎதிர் அணியாய் உறவுகள்இப்பொழுது...nice lines ...

    பதிலளிநீக்கு