மத வியபாரிகளுக்குள்
மானிடம்
கை மாற
மனிதம்
கலப்படமாய்
கலந்து போனது
மானிடம்
மாண்டு போனது...
ஆங்காங்கே
சதைப் பிண்டத்தின்
நடுவில்
பிணம்
திண்ணும் கழுகளுடன்
கலப்படம்
கலர்படமாய்
நகரத்தில் நகர்வலம்...
அப்பாவிகளை
அழிக்க என்கவுண்டராய்
தடாவாய்
சட்டம்
ஒருப்பக்கமாய்...
ஒருப்பக்கமாய்...
மதத்
தீ மூட்டி
தீயில் எரிக்க
தீக்குள் இரையாக்க
கையில் தீவட்டியோடு
தீயவன்
இருக்கும் வரை...
இருக்கும் மனிதத்தை
இருக்கும் மனிதத்தை
அழிக்க ஆவேசத்துடன்
மதம் என்னும்
போர்வையில்...
போர்வையில்...
மிருகமாய்
நடமாடும்
நடமாடும்
நாடகமாடும்
நாகரிக உலகத்தில்...
மனிதனின் மனம்
மதத்தில் நுழைந்து
மனித நேயம்
மாண்டு போனது...
நாகரிக உலகத்தில்...
மனிதனின் மனம்
மதத்தில் நுழைந்து
மனித நேயம்
மாண்டு போனது...
கவிதை அருமை அண்ணா
பதிலளிநீக்குஉங்கள கருத்துக்கு நன்றி கலையே .
பதிலளிநீக்கு