வாழ்க்கையை தொலைத்து
வாழவே பிடிக்காமல்
தன்னையே
கொலை கொண்டவர்கள்,
கொள்பவர்கள்
நம்மில் சிலர்.
இருப்பதை அறியாமல்
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்
இறந்த கோழைகள்
இறந்தால் என்ன
எலும்புகள் கூட
உன் நிலை சொல்லும்,
வருங்காலம்
உன்னை பார்த்து
நகைக்கும்,
சதைப் போனபின்
எலும்பானாய்...
வெறும் கூடனாய்...
பின் உன்னை கூட்டி
வைத்துப் பார்த்தாலும்
பயம் தந்தாய்
பயனற்று போனாய்
தற்கொலைதான்
உனக்கு விடையா ?
அறுத்து அறுத்து
பார்த்து தற்கொலைதான்
என்று சொல்வது தான்
உன் நிலையா ?
தைரியம் இல்லாதவர்களின் வழிதான் தற்கொலை !
பதிலளிநீக்கு