9 ஏப்., 2012

ஊழல் ஊமையானது
உள்ளதை உலகுக்கு 
உணர்த்த உறுதி கொண்டோர் 
ஊழலில் விழுந்துவிட 


ஊழல் இங்கு 
ஊன்றுகோலாய் 
மாறியது...


ஊழலை கண்பிடிக்க 
வந்தவர்களும் 
ஊழலில் ஊறிவிட...


ஊழல் செய்தவர்களும்
ஊழல், ஊழல் என்று 
போர்க்கொடி தூக்க....


பழைய ஊழல் ஊமையானது
புது ஊழலோ 
பத்திரிக்கைக்கு 
உறவானது 
தலைப்பு செய்தியானது...


தட்டிக் கேட்க முடியாமல்,
தடுக்க வழியில்லாமல் 
நம் மனமும்,
ஓட்டுபோட்ட 
நம் விரல்களும் ஊனமானது...

3 கருத்துகள்:

 1. நாட்டு நடப்பை எரிச்சலுடன் வரிகளாக்கியிருக்கிறீர்கள்.அருமை !

  பதிலளிநீக்கு
 2. பார்த்தசாரதி12 ஏப்., 2012, பிற்பகல் 2:01:00

  கவிதை நல்லா இருக்குங்க ....

  பதிலளிநீக்கு
 3. பார்த்தசாரதி12 ஏப்., 2012, பிற்பகல் 2:03:00

  கவிதை நல்லா இருக்குங்க ...

  பதிலளிநீக்கு