தீயின் ஆதிக்கம்
நம் வாழ்க்கையோடு
உள்ளதடி
அதை சொல்லும் கவிதையடி.
தீபமாய் உருமாறி
ஒளி தந்த படி
உணவுகளுடன் உறவாடி
பின் பசியாற்றி
குளிருக்கு சுகமாய்
இடமாறி...
தீக்குள் மறைந்த
நல்ல குணமடி
சிலர் வளர்ச்சியை
கண்டு தீயே இல்லாமல்
புகைமடி ...
மரமாய் மனிதன்
அரசியலுக்காக எரியுமடி
இந்த தீ மாறுமடி...
இறப்புக்கு பின் உடலுக்கு
சொந்தமடி.
இந்த தீயோடு கலந்த படி
நம் வாழ்க்கை நகருமடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக