தேடுகிற வாதிகள்
இவர் என்றே
வீதியில் போட்டனர்
இறந்தவர்களை.
தீவரவாதிகள்
இவர்கள் என்று
பிறந்த குழந்தைகளையும்
கொலைசெய்தனர்.
தேடிவந்து கைது செய்தனர்,
கைதுக்கு ஒரு கதையை
சொல்லும் கயவர்கள்!
குடும்பத்து பெண்களையும்,
மானம் பங்கம் செய்தனர்
ஒன்றுக்கூடி...!
ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும்
ரத்ததுக்குமா
பஞ்சம்!
எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும்
என்ன விலையப்பா
மனித நேயம் !
போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார்
ஆயுதம்!
படைத்தவன் பரிசோதிக்க
எளியவனின் நாடே
களம்!
இவர்களும் சொல்கிறார்கள்
நாங்கள் நடமாடும்
மனிதர்கள்.
மனித நேயம்
பேசியவண்ணம்....
சீய் போங்கடா...
நீங்களும்,
உங்கள் இனமும்
சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!
இந்த கேடுகெட்ட மனிதர்களுக்கு காட்டில் வாழும் விலங்குகள் எவ்வளவோ பரவாயில்லைதான்...
பதிலளிநீக்குஉங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே
பதிலளிநீக்கு