வாழ்வில் வந்த வாசமலரே
வாழ்க்கை உந்தன் வசமானதே
வசந்தம் உந்தன் வருகையானதே
வளர்பிறையாய் வளர்ந்து போகுதே...
கண்ணே நீ தந்தது கோடி இன்பம்
கள்ளமில்லா வெள்ளை இதயம்
உலகம் வெல்லும் அன்பு கொண்டு-நீ
என் இல்லறமாய் நாடி வந்த பூச்செண்டு!
மனமும் நல்ல குணமும்,சேர்ந்தே இருக்கும்
மணத்துடன் மனைவியாய் என் மனதிலிருக்கும்
கண்ணே!மணியே!என சொல்லி அழைக்கும்-உன்
கடைக் கண் பார்வையோ என்னை ஈர்க்கும்...!
அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது
ஆற்றல் கொண்ட வாழ்வு உயிரே நீ தந்தது
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது...!
மிக நல்ல கவிதை. நல்ல வரிகள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா.இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpres.com
நன்றி சகோதரி உங்கள் வாழ்த்துக்கு
பதிலளிநீக்கு