1 டிச., 2011

என் இனிய மாப்பிளையே


மாப்பிளைக்கு 
பிறந்த நாள் 
இன்று...


உன் உள்ளத்தை 
அறிந்து 
வியந்து போகிறேன் 


உன் எண்ணத்தை
அறிந்து 
மலைத்து போகிறேன் 


உன் அறிவைக் கண்டு 
பெருமைக் கொள்கிறேன் 


நீ என் மருமகனாய்
பிறந்ததை எண்ணி 
மகிழ்கிறேன் 


இன்று 
உன் பிறந்த நாள் 
சிறப்பாய் வாழ 
வாழ்த்துகிறேன் 


பாத்திமா என்ற 
நம்பிக்கை
நம்பி பிடித்த கை
உன் இல்வாழக்கை.


இன்னும் சிறக்கும் 
எல்லோரும் 
போற்றும் படி 
இருக்கும் 


முத்துக்கள் இரண்டு 
முகவரியாய் இருக்க 
கவலைகள் எல்லாம் 
ஓட்டம் பிடிக்க...


மகிழ்வுகள் 
எல்லாம் அணித் திரண்டு 
உன் வாசலுக்கு 
வந்து நிற்க...



கூடும் வயதோடு 
உண்மை பேசும் 
உள்ளத்தோடு 
உறவுக்கு 
கைக்கொடுக்கும்
உன் சிறப்பு 


சில வலிகள் 
போக்க 
உன்னை 
அறிந்துக் கொள்ள
வழிப்பிறக்கும்
உன் நடப்பு...


உண்மைகளை
அறிந்து.
உன் உள்ளத்தை 
புரிந்து 
இறைவன் தருவான் 
என்றும் நன்மையே...


வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
என் இனிய மாப்பிளையே

2 கருத்துகள்:

  1. உங்கள் மாப்பிள்ளைக்கு எங்கள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். நல்ல கவிதை வாழ்த்து அவரும் மனம் மகிழ்ந்திருப்பார்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சொன்ன சகோதரிக்கு நன்றி நன்றி .

    பதிலளிநீக்கு