1 டிச., 2011

பெற்ற பாவத்திற்கு...


மனதுக்குள் தீயை
எறியும் நிலையிலும்
அந்த வீட்டில் மட்டும்
மயான அமைதி...


பார்த்து பரவசம்
பத்து நாள் பழக்கம்
பத்து மாதத்துக்கு
தந்து மகிந்தது துக்கம்


வெறு வாய்க்கள்
அவுலை மெல்லுவது
போல அவளை பற்றி
தெருவே ஒன்று
கூடி அசைப்போட்டது


ஓடி போய்விட்டாள்
ஓடுகாலி என்றும்
பிள்ளைகளை வளர்க்க
தெரியவில்லை
என்று வசை முரசு
முழங்கிய வண்ணம்...


இதை எல்லாம் கேட்டு
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்
நம்பிக்கை தோல்வியில்
நடைபிணமாய்
பெற்ற பாவத்திற்கு
பெற்றோர்கள்...

2 கருத்துகள்:

  1. ஐயோ கொடுமை ...பாவம் பெண்ணைப் பெற்றவர்கள் .....உண்மை சொல்லும் வரிகள் .........கவிதை அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  2. ஊக்கமான மறுமொழிக்கும். உணர்வு கலந்த கருத்துக்கும் நன்றி தங்கையே!

    பதிலளிநீக்கு