2 டிச., 2011

சிலா உறவுகள் அப்படித்தான்...





உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை 
மறைத்துக் கொள்ளாமல் 
பேசியே கொல்லும்
சில 
உறவுகள் அப்படித்தான்...


வார்த்தைகளை 
கடை விரித்து 
ஏலம் போட்டு 
விலகிப்  போகும் 
மனமாய் 
உறவுகள் அப்படித்தான்...


சில உண்மைகள் 
கசக்கும் 
காரணங்கள் அறிந்தாலும் 
புரிந்தாலும் 
தெரியாத வண்ணமாய் 
நாடகமாடும் 
சில 
உறவுகள் அப்படித்தான்...


குற்றங்களை 
குறி வைத்து 
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து 
குறை சொல்ல 
நாடும் சில 
உறவுகள் அப்படித்தான்...


அட போங்கடா 
தொப்புள் கொடி 
உறவே 
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள் 
உணர்ந்தா போகும்...


உண்மை கசக்கும் 
உண்மையை 
சொன்னால்...


பத்தோடு ஒன்று 
அத்தோடு ஒன்றாய் 
போனால் சரி 


பிறந்து விட்டமே 
எப்படி போவது 
மனச் சாட்சி 
கேட்டால் 


பழிக்கு  பலியாகி 
உன்னையே குறை 
சொல்லும் 
சேராத தண்டவாளமாய் 
சிலா  
உறவுகள் அப்படித்தான்...

2 கருத்துகள்:

  1. அட போங்கடா தொப்புள் கொடி உறவே புரிந்துக் கொள்ளாதபோதுமற்ற உறவுகள் உணர்ந்தா போகும்.............இந்த வரிகள் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ..... .சில யுறவுகள் அப்படித்தான் இருக்கும் போல ...கவிதை அருமை அண்ணா ..............

    பதிலளிநீக்கு
  2. நன்றி கலையே .உங்கள் வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும்..

    பதிலளிநீக்கு