12 டிச., 2011

இந்தியனின் கவலை




விடிந்தது உலகம் என கொண்டேன்-விரலை
விரித்து எழுந்த சூரியனை கண்டு!
வீதியில் பார்த்தேன் விடியவில்லை-விழுந்த
வேட்டியை மறந்த நிலை  மனிதனை கண்டு!

மது ஒன்று போதும் என்று-தினம்
மறவாமல் குடிப்பது உன் எண்ணம்!
மதுவோடு உன் உடலும் கரைவது.-கண்டு
மனம் கொதிக்கிறது என் மனம்.


குடியை குடித்து, குடியை மறந்த  மனம்-வாழ்க்கை 
அருகில் இருந்தும் அறியவில்லை 
அன்பை மறக்கும் போதைக்கு அடிமை நீ-குடி மகனாய் 
எப்போது  திருந்துவாய் உன்னை நீயே உணர்வாய்!

நீ யாரோ நான் அறியவில்லை-நீ 
நினைவின்றி காணும் போது பதறுகிறேன்!
நீ விடியலை தேடாமல் குடிப்பதை கண்டு -கண்களில் 
நீர் வடிக்கிறேன் உன் சகோதரனாய் துடிக்கிறேன்!

8 கருத்துகள்:

  1. >நீ விடியலை தேடாமல் குடிப்பதை கண்டு -கண்களில்
    நீர் வடிக்கிறேன் உன் சகோதரனாய் துடிக்கிறேன்!

    Super

    பதிலளிநீக்கு
  2. விடியலைத் தேடாது குடியில் மடிபவன் பற்றிய தங்கள் வரிகள் கண்டேன் வாழ்த்துகள் சகோதரா. தொடரட்டும். பணி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. எஸ் சக்திவேல் : நன்றி தோழரே ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  4. கவிதை கோவைக்கவி: உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  5. கவிதை அருமை அண்ணா ....கவிதை அடிகளில் மாற்றம் செய்து இருக்குறிர்களே ...

    பதிலளிநீக்கு
  6. kalai அந்த கவிதை வேறு தங்கையே!இதுவேறு ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  7. அண்ணா நான் சொல்வது உங்க way of writing மாறி இருக்கு இந்த கவிதையில் ....அண்ணா நான் உங்ககவிதை ரொம்ப ரசிச்சி படிக்கிறேன் ....செத்தால் நல்லதடி கவிதை நல்ல நியாபகம் இருக்கு அண்ணா .....உங்க கவிதை விசிறி நான் ,,,,,

    பதிலளிநீக்கு
  8. இது ஒரு சக சகோதரனின் பார்வை...அந்த கவிதை மானிடத்தின் கோவப் பார்வை...இவர்கள் திருந்த வேண்டும் ,இல்லை செத்து மடிய வேண்டும்...குடியை கெடுக்கும் குடி மகன் ,குடியை மறக்கவேண்டும் ,இதுவே எனது வேண்டுதல் தங்கையே .நன்றி வருகைக்கு .நன்றி உங்கள் மறுமொழிக்கு.

    பதிலளிநீக்கு