3 டிச., 2011

விலைவாசி...




ஏழைகள் 
பயன் படுத்தும் 
குளத்தில் 
பாசி பிடித்த 
நிலையில்...


ஏழைகளை 
வாழவிடாமல் 
முடக்கிவிட 

யாரோ  விட்ட 
சாபமாய்...


முன்னேறவே 
வேண்டாம் 
வளரவே 
கூடாது என்று 
கங்கணம் 


வானமும் 
பொய்ப்பிக்க 
வாக்கும் 
நிறமாறி 
காற்றில் 
கற்பூரமாய் 
கரைந்து
போகவே 


வருடா வருடம்
செய்வினையாய்
விலைவாசி

வழமையாய் 
உயர்ந்து 
சிரித்தது 
பயமுறுத்தும் 
சட்டமாய்...

2 கருத்துகள்:

  1. செய்வினையோடு சூனியமும் வைக்க தயார் நம் நிலை ,,,
    சில்லறையில் அந்நியர்களுக்கு வாய்ப்பளிக்கத் துடிக்கும் அரசு ...
    கடலில் கலந்து வீணாவதைக கூட தடுத்து நிறுத்த நினைக்கும் நம் அண்டை நிலம் ...
    விலைவாசி வஞ்சனையி இல்லாமல் வளர்ந்து
    வாழ்வாதாரம் ஒவ்வொன்னரையும் பறிக்கப் போகிறது ///கவிதை அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  2. அழகான மறுமொழி உங்கள் மொழியோடு ஒலிக்கிறது .நன்றி நன்றி

    பதிலளிநீக்கு